மனுதர்மம் பற்றி திருமாவளவன்.
பெண்கள் அனைவரும் பரத்தைகளாக, வேசிகளாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் என இந்துமதத்தின் மனு தர்மம் கூறுகிறது " - திருமாவளவன். தமிழ் கூறும் நல்லுகுக்கு வணக்கம்... திருமாவளவனின் இந்த பேச்சுக்கு எந்தவித விமர்சனத்தையும் வைக்காமல் நாம் நேரடியாக மனுதர்மத்துக்கு சென்றுவிடுவோம். ஏனெனில் ஒரு ஆய்வு கட்டுரை, விமர்சனம் செய்துவிட்டு பிறகு ஆய்வை தொடங்கினால், அது கற்பிதமாக ஆகிவிடும் என்பது என் தனிப்பட்ட கூற்று... (முன்குறிப்பு :- மனுதர்மம் எழுதப்பட்ட காலம் இன்றிலிருந்து குறைந்தபட்டசம் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என வரலாற்று அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள் . என்னைப்பொருத்தவரை, அது 4000 வருடங்களுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும், ஏனெனில் பிரகஸ்பதியே இதற்கு வியக்கியானம் செய்துள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நூல், சமஸ்கிருத மொழி விற்பன்னர் திருலோக சீதாராம் தமிழில் மொழிபெயர்த்த 'மனுதர்ம சாஸ்திரம்'.) பெண் கற்பு பற்றி மனுதர்மத்தில், அத்தியாயம் 9 (ஆண் பெண்களின் அறம்) சுலோகங்கள் 15, 16, 17, 18 களில் மனு சர்ச்சைக்குரியவாறு குறிப்பிடுகிறார்(?!).. ஸ்லோகங்கள் 19, 20 ஆகியவற்...