Posts

Showing posts from December, 2024

மாமேதை அம்பேத்கரின் 'நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்'.

Image
(மாமேதை அம்பேத்கரின்  'நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்' என்ற நூலை பற்றிய எனது பார்வை. 11/01/21 அன்று நான் முகநூலில் எழுதியது. அதை இங்கு பதிவதில் மகிழ்கிறேன்..) தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்....  சமீபத்தில்தான் அம்பேத்கரின் 'நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்', என்ற நூலை படித்தேன்...  (இந்தத் தலைப்பில் அம்பேத்கர் நூல் ஏதும் எழுதவில்லையே என்று குழம்ப வேண்டாம். அம்பேத்கரின், மதம் மாற்றத்திற்கான அறிவிப்புகளையும், அதன் உள்ளார்ந்த தேவைகளையும் விளக்கி கூறும், அவருடைய மாநாட்டுப் பேருரைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து, அவரின் சபதமான "நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்" என்பதையே தலைப்பாக கொடுத்து நூலாக தொகுத்து இருக்கிறது, தலித்முரசு .)  தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாற வேண்டிய அவசியத்தையும், அதன் நியாயத்தையும் மிக விரிவாக ஒரு நியாயமான தளத்திலிருந்து, அதன்மீதான தத்துவ விசாரணையையும் வாதங்களையும் செய்திருக்கிறார் அம்பேத்கர் அவர்கள். இந்த நூலைப் படிக்கும் போது பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிவதுடன், தீண்டாமையின் உண்மையான வலி என்ன என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.  ஆனால...

திருவள்ளுவரும் காவிச்சாயமும்!

Image
#திருவள்ளுவரும்_காவிச்சாயமும். ( இக்கட்டுரை, 24/02/21 அன்று நான் எழுதி முகநூலில் பதிவிட்டேன். அதை மறு பதிவாக இங்கே பதிவிடுவதில் மகிழ்கிறேன். இவ்வாராய்ச்சிக்காக நான் எடுத்துக்கொண்ட உரைநூல் பற்றியும் ஏன் என்பது பற்றியும் பின்குறிப்பில் பதிவிட்டுள்ளேன்) தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம். மீண்டும் பஞ்சாயத்தாகிறது 'திருவள்ளுவருக்கு காவிச்சாயம்' விவகாரம். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு தமிழக ப.ஜ.க.வின் ட்விட்டர் பக்கத்தில் குறள் : 2 ஐ பதிவிட்டு கீழே காவி உடை தரித்த திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டு இருந்தனர். (பார்க்க படம் 1) அதற்கு பெரும் எதிர்ப்பு தமிழ் ஆர்வலர்களிடமும் திராவிட, தமிழ்தேசிய இயக்கங்களிடமும் எழுந்தது. இப்போது, மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்தில்  வரையப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவர் குடுமியும் பூநூலும் தரித்து ஒரு பிராமனராக காட்டப்பட்டுள்ளது, (பார்க்க படம் 2) மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. உண்மையில் நடப்பது என்னதான்? யார்தான் திருவள்ளுவர்??? திருவள்ளுவரின் சித்தார்ந்த தத்துவார்த்த அடிப்படையில் அவர் யார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர...