கேரளாவின் சேரமான் ஜும்மா பள்ளிவாசல் கி.பி. 612ல் கட்டப்பட்டதா?!
உலகின் இரண்டாவது பழமையான பள்ளிவாசல், கேரளாவில் இருக்கும் சேரமான் ஜும்மா பள்ளிவாசல்... உலகின் இரண்டாவது அதிகமான (190 கோடி) மக்களால் பின்பற்றப்படும் மதமான இஸ்லாத்தின் இரண்டாவது பள்ளிவாசல் இந்தியாவில் இருந்தால், அது இந்தியாவிற்கு பெருமைதானே?! அதுதான் கேரளாவின் கொடுங்களூரில் இருக்கும் சேரமான் ஜும்மா பள்ளிவாசல் .. இது உண்மைதானா???!!! (முன்குறிப்பு :- இந்த கட்டுரை அதிகளவில் இஸ்லாமிய வரலாற்றோடு பயணிப்பதால், ஆண்டு கணக்கை குறிப்பிடப் பயன்படும் கால வரையறையான கி.மு - கி.பி என்பன வேறு மதத்தின் குறியீடாக இருப்பதால், அவற்றுக்கு பதில் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பொது யுக கால காணக்கை கையாள்கிறேன். இண்டும் ஒன்றுதான். கிறுஸ்துவுக்கு முன் = பொது யுகத்திற்கு முன். கிறுஸ்துவுக்கு பின் = பொது யுகத்திற்கு பின். எனவே படிப்பவர்கள், பொ.யு.பி = கி.பி என்பதை நினைவில் கொள்ளவும். இஸ்லாமிய ஆண்டுக்கணக்கான ஹிஜ்ரியை கையாளலாம், ஆனால் அது பிற மதத்தினருக்கு புரியாது. மற்றப்படி ஒரு வரலாற்று ஆர்வலனாக இதில் எதை கையாண்டாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.) தமிழ் கூறும் நல்லுலக்கு வணக்கம்... இப்பதிவு , ஒரு முகநூல் பதிவின...